Bible Promises
The Living Word of God for Daily Encouragement
100 Biblical Promises
I will make you into a great nation, and I will bless you; I will make your name great, and you will be a blessing.
நான் உன்னை ஆசீர்வதித்து, உன் பேரை பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
I am with you and will watch over you wherever you go, and I will bring you back to this land.
நான் உன்னோடு கூட இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, உன்னை இந்தத் தேசத்திற்குத் திரும்பிவரப்பண்ணுவேன்.
No one will be able to stand against you all the days of your life. As I was with Moses, so I will be with you; I will never leave you nor forsake you.
நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடு இருந்ததுபோல உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
So do not fear, for I am with you; do not be dismayed, for I am your God. I will strengthen you and help you; I will uphold you with my righteous right hand.
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகைக்காதே, நான் உன் தேவன்; நான் உன்னை பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
But those who hope in the Lord will renew their strength. They will soar on wings like eagles; they will run and not grow weary, they will walk and not be faint.
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப் பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
The Lord will grant that the enemies who rise up against you will be defeated before you. They will come at you from one direction but flee from you in seven.
உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறியடிக்க ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு விரோதமாய் வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
The lions may grow weak and hungry, but those who seek the Lord lack no good thing.
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைபடாது.
I will instruct you and teach you in the way you should go; I will counsel you with my loving eye on you.
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
The Lord will keep you from all harm—he will watch over your life.
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
They will fight against you but will not overcome you, for I am with you and will rescue you, declares the Lord.
அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணuவார்கள், ஆனாலும் உன்னை ஜெயிக்கமாட்டார்கள்; உன்னைத் தப்புவிப்பதற்காக நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
